வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசருக்கு வழிபாடு
NEWS Mar 01,2026 11:46 pm
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வேளுக்குடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.