திருவாரூர் மாவட்டம் குடவாசல் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் பரிகார பூஜை நடைபெற்றது. சேஷபுரீஸ்வரருக்கும் வெள்ளி நாகத்திற்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.