ஆலங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைப்பு
NEWS Feb 12,2026 11:20 pm
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி காமராஜர் காலனி செந்தில் வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை அதிமுக மாவட்ட செயலாளர் ரா.காமராஜ் எம்எல்ஏ கைத்தறி அணிவித்து வரவேற்றார். அப்போது வலங்கைமான் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.