அடியக்கமங்கலம் கோவிலில் இஸ்லாமியர் சீர்வரிசை
NEWS Feb 01,2026 09:30 pm
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் காசி விஸ்வநாத சுவாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். கோவிலுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களை இந்துக்கள் பன்னீர் தெளித்து, பொன்னாடை போர்த்தி மரியாதையுடன் வரவேற்றனர். பண்பாட்டை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.